தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

Monday, October 9th, 2017

தென்னாபிரிக்கா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 254 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, நான்கு வீரர்களின் சதத்துடன் 4 விக்கட்டுக்களை இழந்து 573 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் Dean Elgar, ashim Amla,.Aiden Markram ஆகியோர் தலா 113, 132, 143, ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர். du Plessis ஆட்டமிழக்காது 135 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றது.இதனை தொடர்ந்து பொலோ ஒன் முறை மூலம் மீண்டும் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 172 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.இதற்கமைய 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரை தென்னாபிரிக்கா அணி 2க்கு பூச்சியம் என முழுமையாக கைப்பற்றியது

Related posts: