தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 282 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
507 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி பெற்ற பதிலெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டையும் இழந்து 224 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் மெத்திவ்ஸ் 49 ஓட்டங்களையும் சந்திமால் 30 ஓட்டங்களையும் சில்வா 29 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 22 ஓட்டங்களையும் தரங்க 12 ஓட்டங்களையும் லக்மால் 10 ஓட்டங்களையும் குமார 9 ஓட்டங்களையும் பிரதீப் 5 ஓட்டங்களையும் பெற்ற அதே வேளை ரங்கன ஹேரத் 35 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
பின்வரிசையில் வந்த ரங்கன ஹேரத் மாத்திரமே தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடித்து ஆடியமை விசேட அம்சமாகும்.தென்னாபிரிக்க அணி சார்பாக பந்து வீச்சில் ரபடா 6 விக்கெட்டையும் பிலான்டர் 3 விக்கெட்டையும் மஹராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.போட்டியின் ஆட்ட நாயகனாக ரபடா தெரிவானார்.
Related posts:
|
|