தொடரை வென்றது இந்தியா!

Monday, December 12th, 2016
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. 4வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வென்று தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது.

இதில் நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களும், இந்தியா 631 ஓட்டங்களும் எடுத்தது.

231 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களே சொதப்பினர்அடுத்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட் – ஜானி பேர்ஸ்டோ 4வது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி 92 ஓட்டங்கள் எடுத்தது.

77 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரூட் ஜெயந்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 18, ஜேக் பால் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இன்று காலை 5ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 195 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா 36 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொரை கைப்பற்றியுள்ளது. இதுவரையிலும் கோஹ்லி தலைமையிலான டெஸ்ட் அணி தொடரை இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ashwin67688-12-1481519304

Related posts: