தொடரை வென்றது இங்கிலாந்து  !

20905 Monday, March 12th, 2018

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 5வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

க்ரைஸ்சேர்ச்சில் (Christchurch ) இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சூழட்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் மிட்செல் சண்ட்னர் (Mitchell Santner) 67 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.

இதனை தொடர்ந்து 224 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 32.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில், ஜொனி பெயர்ஸ்டோவ் (Jonny Bairstow) 104 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.இதற்கமைய தொடரை 3 க்கு 2 என இங்கிலாந்து கைப்பற்றியது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!