தொடரை முழுமையாக வென்றது தென்னாபிரிக்கா !

Saturday, October 15th, 2016

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டியின் 5ஆவதும் இறுதியுமான போட்டியில், டேவிட் வோணரின் அதிரடியான சதத்துக்கு மத்தியிலும் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, அத்தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி, அவுஸ்திரேலியாவை வெள்ளையடித்துள்ளது.

கேப் டௌணில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 327 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் றீலி றொஸோ 122 (118), ஜே.பி.டுமினி 73 (75), டேவிட் மில்லர் 39 (29) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜோ மெனி, கிறிஸ் ட்ரமெய்ன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் ஸ்கொட் போலன்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

328 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 296 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 31 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் தனது 9ஆவது சதத்தைப் பூர்த்தி செய்த வோணர், 173 (136) ஓட்டங்களைப் பெற்றார். தவிர, மிற்சல் மார்ஷ், ட்ரவிஸ் ஹெட் இருவரும் தலா 35 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கைல் அபொட், கஜிஸ்கோ றபடா, இம்ரான் தாஹிர் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக டேவிட் வோணர் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக றீலி றொஸோ தெரிவானார்

article_1476369646-InSA_13102016_GPI

Related posts: