தொடரை தன்வசப்படுத்தியது இலங்கை இளையோர் அணி!

Sunday, August 14th, 2016

19 வயதுக்கு கீழ்ப்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கட் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 01 விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 03 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 என்று இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் பதிலுக்கு தடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.01 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 318 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பாக அவிஷ்க பெர்ணாந்தோ 117 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Related posts: