தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!

Monday, March 2nd, 2020

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி, பல்லேகெலே விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் குசல் மென்டிஸ் 55 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 301 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் இலங்கை அணி 3-0 என்ற ரீதியில் தொடரை கைப்பற்றியுள்ளது.

Related posts: