தொடரை கைப்பற்றியது இலங்கை!

Tuesday, March 7th, 2017

இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி  4 விக்கட்டுகளால் வெற்றிபெற்று, 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட  தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி பெல் ட்ரம்மொவுட் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக செஹான் ஜயசூரிய 35 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

185 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 37 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட செஹான் ஜயசூரிய 83 ஓட்டங்களை விளாசி அசத்தினார்.

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை ஏ அணி 3-0 என கைப்பற்றியுள்ளதோடு, மேலும் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: