தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா!
Tuesday, December 19th, 2017
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஆஷஸ் தொடரின் 3 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இன்னிங்சாலும் 41 ஓட்டங்களாலும் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியில், இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 403 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா அணி 9 விக்கட்டுக்களை இழந்து 662 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இதில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 239 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.அதன்படி , தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இறுதி நாளன்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 218 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அதன்படி , அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றிருந்த நிலையில் , 2017 -2018 ஆண்டுக்கான ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|