தொடரை இழந்தார் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க!

Thursday, February 22nd, 2018

இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே  எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள சுதந்திர தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷெஹான் மதுஷங்க நீக்கப்பட்டுள்ளார்.

உடல் உபாதை காரணமாகவே இவர் குறித்த போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த போட்டிகள் கொழும்பு – ஆர்.பிரேமதாச மைதானத்தில் மார்ச் மாதம் 06ஆம் திகதி முதல் 18ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: