தொடரை இழந்தது இந்திய அணி !

Wednesday, February 12th, 2020

30 ஆண்டுகளுக்கு பின்னர் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடர் ஒன்றை இந்திய அணி முழுமையாக இழந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை 2 க்கு 0 என்ற அடிப்படையில் நியூஸிலாந்து அணி முன்னதாக கைப்பற்றியிருந்தது.

இந்த நிலையில், இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி, 5 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், 297 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி, 47.1 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இதனூடாக 3 க்கு 0 என்ற அடிப்படையில் நியூஸிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது. 1988 மற்றும் 89 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை 5 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி முழுமையாக இழந்தது.

அதற்கு முன்னர், 1983 மற்றும் 84 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை இந்திய அணி 5 க்கு 0 என்ற அடிப்படையில் முழுமையாக இழந்திருந்தது.

இதேநேரம், 2006 மற்றும் 07 ஆம் ஆண்டுகளில் தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை 4 க்கு 0  என்ற அடிப்படையில் இந்திய அணி இழந்திருந்தது. அந்தத் தொடரின் முதலாவது போட்டி கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: