தொடரில் இருந்து விலகினார் மலிங்கா..

Sunday, March 20th, 2016

டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து மலிங்கா விலகியதையடுத்து ஜெப்ரி வந்தர்சே அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வந்தார்.

அவர் அதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவர் உலகக்கிண்ண அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது காயம் குணமடையாததால் அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து 26 வயதான வலது கை சுழற்பந்து வீச்சாளரான ஜெப்ரி வந்தர்சே அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து அணியில் 3 சுழற்பந்து வீரர்கள் உள்ளனர்.

முன்னதாக ஆசியக்கிண்ண தொடரிலும் அவர் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

இவர் கடந்த ஆண்டு யூலை மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். 4 டி20 போட்டிகளில் விளையாடி 1 விக்கெட் எடுத்துள்ளார்

Related posts: