தொடரிலிருந்து விலகும் பிராவோ !

மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரரான பிராவோ காயம் காரணமாக 10வது ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். சென்னை அணியில் கலக்கி வந்த பிராவோ 10வது ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
கடந்த டிசம்பர் 2016ல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் டி20 தொடரில் விளையாடியபோது பிராவோவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது.இதற்காக, கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் ஒரு போட்டியில் கூட குஜராத் அணிக்காக களமிறங்காத நிலையில் தொடரிலிருந்தே விலகியுள்ளார். இந்நிலையில், அவரது இடத்தை நிரப்பும் மாற்று வீரராக இந்திய வீரர் இர்பான் பதான் குஜராத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related posts:
பிரியலக்சன் அபாரசதம் சென்றலைட்ஸ் வெற்றி!
ஒலிம்பிக் போட்டியில் ரோபோ!
கொரோனா தாக்குதல் அச்சம்: ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு!
|
|