தொடரிலிருந்து விலகப்போவதாக அவுஸ்திரேலிய சிரேஷ்ட கிரிக்கட் வீரர்களின் எச்சரிக்கை

பங்களாதேஸ் அணிக்கு எதிரான கிரிக்கட் தொடரில் இருந்து விலகப்போவதாக அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் எச்சரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கட் நிறுவனத்துக்கும், அதன் வீரர்களுக்கும் இடையில் நீண்டகாலமாக வேதனம் தொடர்பான பிரச்சினை நிலவுகிறது.
இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால், தாங்கள் குறித்த தொடரில் இருந்து விலகவிருப்பதாக சிரேஷ்ட வீரர்கள் எச்சரித்திருக்கின்றனர்
பங்களாதேஸுடனான கிரிக்கட் தொடருக்கான பயிற்சிகள் 10ம் திகதி டார்வினில் ஆரம்பிக்கிறது.
இதில் தாங்கள் கலந்துக்கொள்கின்ற போதும், பிரச்சினைத் தீர்க்கப்படாமல் நாட்டில் இருந்து பங்களாதேஸுக்கு பயணிக்கப் போவதில்லை என்று சிரேஷ்ட வீரர்கள் அறிவித்துள்ளனர்.
Related posts:
கிறிஸ் கெய்ல் அதிரடி: இங்கிலாந்தை புரட்டிப்போட்டது மேற்கிந்திய தீவுகள்
ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா தொடர்ந்தும் ஆதிக்கம்!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹரூபிற்கு பதவி!
|
|