தேனிக்களால் நிறுத்தப்பட்ட கால்பந்து போட்டி!

Tuesday, July 19th, 2016

தேனிக்கள் கொட்டத் தொடங்கியதால், எக்வடார் நாட்டில் நடந்து கொண்டிருந்த கால்பந்துப் போட்டி ஒன்று இடைநிறுத்தப்பட்டது.

எக்வடார் நாட்டின், கையாக்வில் நகரில் , ரிவர் எக்வடார் மற்றும் ஔக்காஸ் அணிகளுக்கிடையே கால்பந்துப் போட்டி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது போட்டி தொடங்கிய 10வது நிமிடத்தில், தேனிக்கூட்டம் ஒன்று விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் கால்பந்து ரசிகர்களைக் கொட்டத்தொடங்கியதை அடுத்து , போட்டி நிறுத்தப்பட்டது.

கால்பந்து அணியினர் சுமார் அரை மணி நேரம் பொறுத்திருந்து பார்த்தனர். ஆனால் தேனிக்கூட்டம் சென்றபாடில்லை. எனவே மிச்சமுள்ள போட்டியை மறுநாளட் ஒத்திவைக்க நடுவர்கள் முடிவு செய்தனர். தேனிக்களை விரட்ட தீயணைப்புப் படையினரின் உதவி கோரப்பட்டிருக்கிறது.

 

Related posts: