தேசிய மட்ட வலைப்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

Sunday, April 1st, 2018

தேசிய மட்டத்தில் வலைப்பந்தாட்ட விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத் திணைக்களம் ஆகியன இணைந்து நடவடிக்கை மேற்கொள்கின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கண்டி மாவட்ட வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள், நடுவர்கள் ஆகியோருக்கு பயிற்சியளிக்க ஏற்பாடாகியுள்ளது.

குறித்த பயிற்சித் தொடரின் முதலாவது நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெறவுள்ளது. இதில் 20 பயிற்சியாளர்களும்  20 நடுவர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: