தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தல் சாதிக்கும் வடக்கு வீராங்கனைகள்!
Saturday, October 15th, 2016பெண்களிற்கான கோலூன்றிப் பாய்தலில் வடமாகாண வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை கைபற்றியுள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகள் கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 17 வயதுப் பிரிவு பெண்களிற்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியை சேர்ந்த சி.ஹெரீனா 2.70 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த சங்கவியும், பளை மத்திய கல்லூரியைச் சேர்ந்த திவ்யாவும் 2.60 மீற்றர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று முன்தினமும் வடக்கு மாகாணத்திற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்தன இதுவரை 7 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இன்றைய தினம் இடம்பெறவுள்ள 21 வயதுப் பிரிவு பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் வடக்கின் தங்கமங்கையென அழைக்கப்படும் மகாஜனக் கல்லூரி மாணவி அனித்தா பங்குபற்றவுள்ளார். ஏற்கனவே இம்மாணவி திறந்த வயதுப்பிரிவு போட்டியில் புதிய சாதனையை படைத்திருக்கும் நிலையில் இன்றைய தினமும் தனது சாதனையை முறியடித்து மீண்டும் ஒரு புதிய சாதனையை நிலை நாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
|
|