தேசிய கால்பந்தாட்ட பெண்கள் அணியில் யாழ் வீராங்கனைகள் ஆறு பேருக்கு இடம்!

Friday, August 10th, 2018

பூட்டான் தலைநகர் திம்புவில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 15 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கவிருக்கும் இலங்கை கால்பந்தாட்டக் குழாமில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகள் இடம்பிடித்தனர்.

தொடருக்குச் செல்லவுள்ள 23 பேர் கொண்ட குழாமில் உள்ளடக்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரங்களை நேற்று முன்தினம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. இதில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த ர.கிருசாந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா மற்றும் பா.செயந்தினி ஆகியோரும் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் எஸ்.தவப்பிரியா, யு.ஜோகிதா மற்றும் ஜெ.ஜெதுன்சிகா ஆகியோரும் அவ்வாறு 23 பேர் கொண்ட அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

Related posts: