தேசிய கனிஷ்ட மெய்வன்மை விளையாட்டு விழா; அனிட்டா ஜெயதீஸ்வரன் மீண்டும் சாதனை!

சுகததாஸ மைதானத்தில் ஆரம்பமான தேசிய கனிஷ்ட மெய்வன்மை விளையாட்டுப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனிட்டா ஜெயதீஸ்வரன் இலங்கை சாதனையைநிலைநாட்டியுள்ளார்.
இவர் கோலுன்றிப் பாய்தல் போட்டியில் 3.55 மீற்றர் உயரத்தை பாய்ந்து சாதனையை நிலைநாட்டினார்.
கம்பஹா மாவட்ட வீரர் ர்.னு.ரு. பெரேரா 23 வயத்திற்கு உட்பட்டவர்களுக்கான உயரம் பாய்தலில் சாதனை நிலைநாட்டினார்.
பம்பலப்பிட்டி சென் பீற்றர் கல்லூரியை சேர்ந்த இருஷ ஹஷேன் என்ற வீரர் ஏழு மீற்றருக்கு மேலான தூரத்தை பாய்ந்து சாதனை நிலை நாட்டினார். அத்துடன் அதே பாடசாலையைச் சேர்ந்த ஒமேஷ் தரங்க வட்டு எறிதல் போட்டியில் 55.34 மீற்றர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்தார்.
கொழும்பு பிஷப் கல்லூரி மாணவி ஒவினி சந்திரசேகர குண்டு எறிதல் போட்டியில் 11.9 மீற்றர் தூரத்திற்கு வீசி புதிய சாதனையை நிலைநாட்டினார்.
Related posts:
தனஞ்சய டி சில்வா சதம் : மீண்டது இலங்கை!
ஆப்கானை வென்றது சிம்பாம்வே..!
ஆப்கான் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை!
|
|