தேசியமட்ட தட்டெறிதல் போட்டியில் ஹாட்லிவீரர் சாதனையுடன் தங்கம்!

Saturday, November 11th, 2017

இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான ஜோன்காபற் இளநிலைப் பிரிவினருக்கான தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த எஸ். மிதுன்ராஜ் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

கொழும்பு தியகம பன்னாட்டு விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் நேற்று முன்தினம் நடைபெற்றது. பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.மிதுன்ராஜ் 53.22 மீற்றர் தூரத்துக்கு எறிந்து புதிய சாதனையை பதிவுசெய்ததுடன் தங்கப் பதக்கத்தையும் சுவீகரித்தார். முன்னதாக இருந்த சாதனையை விட 6.56 மீற்றர் அதிகம் எறிந்து சாதனை படைத்தார் மிதுன்ராஜ்.

இதே வயதுப் பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த பி.மிதுசன் 43.43 மீற்றர் தூரத்துக்கு எறிந்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

Related posts: