தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி கால்பந்தாட்டத்தில் சம்பியனானது!

Friday, May 18th, 2018

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி மோதியது.

கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி. இரண்டாவது பாதியாட்டத்திலும் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடிக் கொண்டிருந்தன.

நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவு வரை கோல்கள் எவையும் பதிவாகவில்லை. சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை 8:7 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி. சிறந்த கால்பந்தாட்ட வீரராக வ.ஜக்சன் தெரிவானார்.

Related posts: