தென் ஆப்பிரிக்கா வெற்றி!

Thursday, August 2nd, 2018

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என முன்னிலை வகிக்கிறது.

முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக, டாஸ் வென்று பேட் செய்த இலங்கையில் அதிகபட்சமாக கேப்டன் ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 79 ரன்கள் எடுக்க, அவரோடு பிரபாத் ஜெயசூரியா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் லுன்கி கிடி, அன்டிலே பெலுக்வாயோ தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் குவின்டன் டி காக் அதிகபட்சமாக 87 ரன்கள் விளாசினார். வில்லியம் முல்டர் 19, அன்டிலே பெலுக்வாயோ 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். இலங்கை தரப்பில் அகிலா தனஞ்ஜெயா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். டி காக் ஆட்டநாயகன் ஆனார்.

Related posts: