தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா!

மூன்று நாடுகள் பங்கேற்கும் மும்முனை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா அணி 36 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. வார்னர் 109 ரன்னும், குவாஜா 59 ரன்னும் எடுத்தனர். இம்ரான் தாகீர் 2 விக்கெட்டும், அபோட், ரபடா, பர்னல் பாஞ்சியோ தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 47.4 ஓவர்களில் 252 ரன்னில் சுருண்டது. டுபெலிசிஸ் 63 ரன்னும், அம்லா 60 ரன்னும் எடுத்தனர். ஸ்டார்க் ஹாசல்வுட், ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இந்தத் தொடரில் அவுஸ்திரேலியா பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். தென் ஆப்பிரிக்காவுக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது. 5-வது லீக் போட்டி நாளை நடக்கிறது. இதில் மேற்கிந்திய தீவுகள் – அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
Related posts:
|
|