தென்னாபிரிக்க விஜயத்தை வெற்றியுடன் முடிக்க எதிர்பார்ப்பதாக அஞ்சலோ மெத்யூஸ் தெரிவிப்பு!

Friday, December 9th, 2016

தென்னாபிரிக்க விஜயத்தை வெற்றியுடன் முடிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை கிரிக்கட் அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி தென் ஆபிரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது.

3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடருக்கான 15 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டது.அஞ்சலோ மெத்யூஸ் தலைமையிலான இலங்கை குழாத்தில் தினேஷ் சந்திமால் உபதலைவர் பொறுப்பை வகிக்கிறார்.

இதேவேளை, இலங்கை அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்கவிற்குப் பதிலாக ரஞ்சித் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

angelo

Related posts: