தென்னாபிரிக்க தொடர் – இலங்கை அணிக்கு சிக்கல்!

Thursday, February 7th, 2019

தென்னாபிரிக்க தொடருக்கு முன்னர் இலங்கை கிரிக்கட் அணிக்கு பயிற்சி போட்டி இல்லாமை சிக்காலான நிலைமை என தெரிவுக்குழுவின் தலைவர் அசந்தடி மெல் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய சுற்றுத்தொடர் முடிவடைந்து தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் ஆரம்பமாக ஒரு வார காலம் இருந்தாலும் பயிற்சி போட்டியை கோருவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் செயல்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி டெர்பனில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: