தென்னாபிரிக்க தொடரில் இளம் வேகப்பந்துவிச்சளர் ஒருவருக்கு இலங்கை அணியில் வாய்ப்பு!

Friday, December 9th, 2016

இலங்கை அணியின் தென்னாபிரிக்க சுற்றுத்தொடரில் புதுமுக வேகப்பந்து வீச்சாளரான24 வயதுடைய இளம் விகும் சஞ்சய என்ற வீரர் ரெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது

இது தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இந்த சுற்றுத்தொடருக்காக இலங்கை அணி 10ம் திகதி கொழும்பிலிருந்து புறப்படுகிறது. இந்த சுற்றுத்தொடர் மூன்று ரெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கியதாகும்.முதல் போட்டி டிசம்பர் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சுற்றுத்தொடரில் அஞ்சலோ மத்தியுஸ், தினேஸ் சந்திமால், துஷ்மந்த சமீர ஆகியோர் விளையாடவுள்ளனர்.
சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்ன, துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் இதில் சேர்க்கப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

b4e8bec3ce7a0815b1c19d3fb5388312_XL

Related posts: