தென்னாபிரிக்க அணி வெற்றி!

Friday, February 14th, 2020

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது 20 க்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்காவின் கிழக்கு லண்டனில் நேற்றிரவு இடம்பெற்ற, இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரில் 1 க்கு 0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது.

Related posts: