தென்னாபிரிக்கா இலங்கை மோதும் போட்டி விபரங்கள்!

Wednesday, December 21st, 2016

தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 3 டெஸ்ட் போட்டிகள், 3 ரி – ருவென்டி போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை போட் எலிசபெத் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

அடுத்து ஜனவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை கேப்டவுண் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், ஜொகனர்ஸ் பேக்கில் ஜனவரி 12 தொடக்கம் 16ஆம் திகதி வரை இறுதி டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளன.

அதைத் தொடர்ந்து ஜனவரி 20,22, மற்றும் 25ஆம் திகதிகளில் முறையே சென்சூரியன், ஜொகர்னஸ்பேர்க் மற்றும் கேப்டவுண் மைதானங்களில் ரி – ருவெண்டி போட்டிகளும் நடைபெற உள்ளன.

அதற்கடுத்து, முதலாவது ஒருநாள் போட்டி 28ஆம் திகதி போட் எலிசபெத் மைதானத்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டி, டேர்பனில் பெப்ரவரி 1ஆம் திகதியும் நடைபெற உள்ளன.

அத்துடன், பெப்ரவரி மாதம் 4ஆம், 7ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் ஜொகர்னஸ்பேர்க், கேப்டவுண் மற்றும் சென்சூரியன் மைதானங்களில் இறுதி மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன.

இதேவேளை, கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் 3 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

88col107-savsl-350x250-720x480164914291_5102075_20122016_AFF_CMY