தென்னாபிரிக்கா அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஓய்வு!

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு பின்னர் தான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்கா அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜே.பீ.டுமினி(34) அறிவித்துள்ளார்.
இருப்பினும், தான் தென்னாபிரிக்க அணிக்காக இருபதுக்கு – 20 போட்டிகளில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த 2017 செப்டெம்பர் மாதம் சர்வதேச டெஸ்ட் மைதானத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் 193 இல் விளையாடி 5047 ஓட்டங்கள் மற்றும் 68 விக்கெட்களை கைபற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாகிஸ்தான் கபடி அணிக்கு தடை!
அடுத்த ஐ.பி.எல் தொடரில் அணிக்கு 5 வீரர்களை தக்கவைக்க அனுமதி!
இலங்கை - அவுஸ்திரேலிய இடையே பகல்- இரவு டெஸ்ட் போட்டி!
|
|