தென்கிழக்கு பல்கலையை வீழ்த்தியது யாழ். பல்கலை!
Tuesday, June 12th, 2018பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 162 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து தென்கிழக்குப் பல்கலைக்கழக அணி மோதியது.
முதலில் தடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப் பரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக ஜனந்தன் ஆட்டம் இழக்காமல் 35, கபில் 34, டனுஸ் 28 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ராஜபக்ச, தேனுவரா ஆகியோர் 2 இலக்குகளையும் பதிர்னா, பண்டார, நுவான் பெல்வதா ஆகியோர் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 27.3 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அதிகபட்சமாக அம்ஜத், 12, நுவான் 12 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் குருகுலசூரிய 3, துவாரகசீலன் 2, சுபேந்திரன் 2 இலக்குகளையும் ஜனந்தன், லோகதீஸ்வர், செந்தூரன் மூவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.
Related posts:
|
|