துரத்தும் துரதிஸ்டம் – இம்முறையும் உலக கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது தென்னாப்பிரிக்கா!

Sunday, November 6th, 2022

அடிலெய்டில் இன்று காலை இடம்பெற்ற போட்டியில் எதிர்பாராதவிதமாக வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது நெதர்லாந்து கிரிக்கெட் அணி.

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் நெதர்லாந்து – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றது.

நெதர்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கொலின் அக்கர்மென் ஆட்டமிழப்பின்றி 41 ஓட்டங்களையும், ஸ்டீபன் மைபர்க் 37 ஓட்டங்களையும், டொம் கூப்பர் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் கேசவ் மஹாராஜ் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, நெதர்லாந்தின் பந்துவீச்சில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. அதற்கமைய, நெதர்லாந்து அணி 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

தென்னாபிரிக்க அணி சார்பில் ரிலி ரூசோ 25 ஓட்டங்களை அணிசார்பில் அதிகபடியாக பெற்றார். பந்துவீச்சில் பிரண்டன் க்ளோவர் 3 விக்கெட்டுக்களையும், பிரெட் கிளாசென் மற்றும் பாஸ் டி லீடே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். போட்டியின் சிறந்த வீரராக கொலின் அக்கர்மென் தெரிவானார்.

இதேவேளை, இந்த தோல்வி தென்னாப்பிரிக்க அணியை தொடரிலிருந்து இருந்து வெளியேற்றியது.

இதேவேளை குழு 2 இல் இருந்து இந்தியா தற்போது அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: