துபாய் டூட்டி பிரீ டென்னிஸ்  கிண்ணத்தை வென்றார் ஸ்விடோலினா !

Tuesday, February 28th, 2017
துபாய் டூட்டி பிரீ மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சாம்பியன் பட்டம்  வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கியுடன் (15வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்விடோலினா  (13வது ரேங்க்) 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று நடப்பு சீசனில் தனது 2வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அரை இறுதியில் 2வது ரேங்க் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தியிருந்த ஸ்விடோலினா, தரவரிசையில் முதல் முறையாக  டாப் 10ல் இடம் பெறுவதை உறுதி செய்துள்ளார்.
A951A526-62CE-4F2E-B2FC-162292C63F5F_L_styvpf