துடுப்பாட்ட ஆலோசகராகிறாரா சச்சின்?

இந்திய அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை நியமனம் செய்ய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிக்கெட் சபை தலைவர் சி.கே.கண்ணா, செயலாளர் அமிதாப் சவுத்ரி, நிர்வாக குழு உறுப்பினர் டயனா எடுல்ஜி, தலைமை செயல் அதிகாரி ராகுல்ஜோரி ஆகியோர் நேற்று (புதன்கிழமை) நடத்திய ஆலோசனை கூட்டத்தின் பின்னர், கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தனர். இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில்,
“இந்திய அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக சச்சினை நியமனம் செய்யலாம் என ரவிசாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவால் அணியில் எந்தவிதமான கருத்து மோதலும் ஏற்படக்கூடாது என வலியுறுத்தி உள்ளோம். இந்த பொறுப்பை சச்சின் ஏற்றுக்கொள்வதால், ஐ.பி.எல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவரது கவனம் தடைபடக் கூடாது.
துடுப்பாட்ட ஆலோசகர் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 25 நாட்களாவது அணியுடன் நிச்சயம் பங்கெடுக்க வேண்டும். அப்படி பங்கெடுக்கவில்லை என்றால் அணியின் மற்ற பணிகளில் தொய்வு ஏற்படும் என சாஸ்திரியிடம் உறுதியாக தெரிவித்துள்ளோம்” என கூறினர்.
Related posts:
|
|