துடுப்பாட்டத்தில் ஸ்கந்தவரோதயக் கல்லுாரி அணி சாதனை!

Wednesday, February 20th, 2019

இலங்கைப் பாடசாலை துடுப்பாட்டச்சங்கத்தினரால் நடத்தப்படும் 13 வயதுக்குட்பட்ட பிரிவு 3 க்கான போட்டியில் ஸ்கந்தவரோதயக் கல்லுாரி ஒரு இனிங்ஸ் மற்றும் 44 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

கடந்த திங்கட்கிழமை சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லுாரி மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் ஸ்கந்தவரோதய கல்லுாரி அணியை எதிர்த்து, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லுாரி அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தவரோதயக் கல்லுாரி அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லுாரி அணி 22.1 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றது.

அவ் அணி சார்பாக கே.சாம்திசன் 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் ஸ்கந்தவரோதயக் கல்லுாரி அணி சார்பில் கே.சீராளன் 6 இலக்குகளையும், கேதுசன் 2 இலக்குகளையும் , வசிகரன் ஓர் இலக்கினையும் வீழ்த்தினர்.

முதலாவது இனிங்ஸ்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயக் கல்லுாரி அணியினர் 47 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

எஸ். கேதுசன் 39 ஒட்டங்களையும், உ.மதுசன் 22 ஓட்டங்களையும், என்.ஸ்ரெபான் 17 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லுாரி அணி சார்பில் சாத்வீகன் 3 இலக்குகளையும் துவாரகன், அபினாஸ் தலா 2 இலக்குகளையும், மதுசன், சம்திசன் தலா ஓர் இலக்கினையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லுாரி அணி 14.4 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் 27 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பாக ஹரிஹரன் 6 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் ஸ்கந்தவரோதயக் கல்லுாரி அணி சார்பில் சீராளன் 6 இலக்குகளையும், தர்மிலன் 3 இலக்குகளையும், கேதுசன் ஓர் இலக்கினையும் வீழ்த்தினர்.

Related posts: