துடுப்பாட்டத்தில் சங்கானை பிரதேச செயலகம் சம்பியன்!

Wednesday, April 11th, 2018

யாழ்ப்பாண மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவினரால் நடத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் சங்கானை பிரதேச செயலக அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியனானது.

சுழிபுரம் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதியாட்டத்தில் சங்கானை பிரதேச செயலக அணியை எதிர்த்து நல்லூர் பிரதேச செயலக அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சங்கானை பிரதேச செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 5 பந்துப் பரிமாற்றங்களில் இலக்குகள் எதனையும் பறிகொடுக்காமல் 65 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக கலைமதி 27, ரஜிதா 23 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நல்லூர் பிரதேச செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 5 பந்துப் பரிமாற்றங்களில் இரண்டு இலக்குகளை இழந்து 54 ஓட்டங்களைப் பெற்று 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக சுபர்ணா 22, கஜந்தினி 15 ஓட்டங்களைப் பெற்றனர்.

Related posts: