தீர்மானமிக்க போட்டியில் இன்று மோதும் இலங்கை!

Monday, June 12th, 2017

சம்பியன் கிண்ணத் தொடரில் இன்றைய தினம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் பயிற்சிக்கு இடையே உபாதைக்கு உள்ளான சகலதுறை வீரர் திஸர பெரேராவிற்கு பாகிஸ்தான் அணி உடன் இடம்பெறும் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஇலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.கார்டிஃப் மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயிற்சியின் போது திஸர பெரேராவின் தலையில் பந்து தாக்கி உபாதைக்கு உள்ளாகிருந்தார்

எவ்வாறிருப்பினும் இன்றைய போட்டியில் வெற்றிப்பெறும் அணி, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

இதேவேளை இந்த தொடருக்கு முன்னர் கிரிக்கட் விமர்சகர்களிடம் வினவிய போது, இம்முறை தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவும் தகுதி பெறும் எனவும், அவுஸ்திரேலியா கிண்ணத்தை கைப்பற்றும் எனவும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககார எதிர்வு கூறியிருந்தார்

எனினும் அண்மையில் இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், வரலாற்றில் முதல் முறையாக செம்பியன் கிண்ண அரையிறுதி போட்டிக்கு பங்களாதேஸ் அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: