திஸரவின் விரல்களில் இருந்து தவறிய பந்து ஆட்டமிழப்பாக மீண்டும் தெரியவந்த விதம்!

Thursday, June 15th, 2017

அண்மையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் திஸர பெரராவின் பந்து வீச்சின் போது ஃபேஹிம் அஷ்ரஃப் ஆட்டமிழந்தமை பலரது கவனத்திற்கு சென்றுள்ளது.

இதேவேளை, இந்த போட்டியில் திஸர பெரேரா தவறவிட்ட பிடியெடுப்பு தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.எனினும் ஃபேஹிம் அஷ்ரஃப் ஆட்டமிழப்பின் போது திஸர பெரேரா வெளிகாட்டிய திறமை தொடர்பில் தற்போது பலரது அவதானம் திரும்பியுள்ளது.

இதன்போது திஸர பெரேரா வீசிய பந்தை சர்பராஸ் அஹமட் தடுத்தாடிய போது அந்த பந்து திஸரவின் கைவிரல்களில் பட்டு மாறுமுனையில் இருந்த விக்கட்டில் பட்டது.இதன்போது மாறுமுனையில் இருந்த ஃபேஹிம் அஷ்ரஃப் ஓட்டத்தை பெறுவதற்காக கீரிஸை தாண்டியிருந்தார்.

இந்நிலையில் பந்து, திஸர பெரேராவின் விரல்களில் பட்டு விக்கட்டில் படச் சென்ற வேளை, ஃபேஹிம் அஷ்ரஃப் மீண்டும் தனது துடுப்பாட்ட மட்டையை கீரிஸிற்கு உள்ளே கொண்டு செல்ல முற்பட்டார். பின்னர் இது ஆட்டமிழப்பாக கோரப்பட்ட நிலையில், தீர்ப்பு 3 ஆவது நடுவருக்கு சென்றது.

இதன் போது மேற்கொண்ட பரிசீலனையில் பந்து, விக்கட்டில் படும் போது ஃபேஹிம் அஷ்ரஃப்பின் துடுப்பாட்ட மட்டை கீரிஸிற்கு மேலாக இருந்தமை தெரியவந்தது.இதன்படி ஃபேஹிம் அஷ்ரஃப் ஆட்டமிழந்ததாக 3 ஆவது நடுவர் தீர்ப்பு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: