திலான் சமரவீரவின் ஒப்பந்தம் நீடிப்பு !

Thursday, November 3rd, 2016

திலான் சமரவீரவை அடுத்தவருடம் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்வரை துடுப்பாட்ட ஆலோசகராக செயற்படுமாறு பங்களதேஷ் கிரிக்கெட் சபை கோரியுள்ளது.

இதன்படி திலான் சமரவீர எதிர்வரும் செம்பியன்ஸ் கிண்ணத்தொடர்வரை பங்களதேஷ் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலான் சமரவீரவை ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கெதிரான போட்டிகளுக்கு மாத்திரம் துடுப்பாட்ட ஆலோசகராக பங்களதேஷ் கிரிக்கெட் சபை ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், அவரது சிறப்பான செயற்பாடு காரணமாக அவரின் ஒப்பந்தத்தை நீடிக்கப்பட்டுள்ளது.

252395

Related posts: