திலங்க சுமதிபாலவிற்கு ICC தலைமை செயல் நிர்வாகி நன்றி தெரிவிப்பு!

மகளிருக்கான உலகக்கிண்ணம் தகுதிச்சுற்றுப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்ததற்கு இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்க சுமதிபாலவின் சிறப்பான செயல்பாடுதான் காரணம் என்று ICC தலைமை செயல் நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
மகளிருக்கான உலகக்கிண்ணம் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் இலங்கையில் கடந்த 7ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெற்றது.
இந்த தகுதிச்சுற்றின் இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதிய ஆட்டத்தில், இந்திய அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்த உலகக்கிண்ணம் தகுதிச்சுற்றுப் போட்டி இலங்கையில் சிறப்பாக நடைபெற்று முடிந்ததற்கு இலங்கைவாரியத் தலைவர் திலங்க சுமதிபாலாவிற்கு தாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்வதாக ICC தலைமை செயல் நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|