திறமையான வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி!
Wednesday, July 12th, 2017
தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பாவனை தொடர்பில் எதிர்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுமென்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கான சட்டங்களை கொண்டுவர எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய இலங்கை அணியை விளையாட்டு அலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற வரவேற்கும் வைபவத்தில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். திறமையான வீர வீராங்கனைகளுக்கு வெளிநாட்டில் மேலதிக பயிற்சிகள் வழங்கப்படுமென்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.
ஆசிய மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் எதிர்காலத்தில் நடைபெறவுள்ளன. இவற்றை இலக்காகக் கொண்டு விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
Related posts:
சதமடித்தார் திக்வெல்ல.
கொக்குவில் இந்துவை வென்றது யாழ். மத்தி!
இங்கிலாந்து அணியிலிருந்து இருவர் நீக்கம்!
|
|