திறமைக்கு கிடைத்த வெற்றி – மோர்கன்!

Saturday, January 28th, 2017

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் தமது அணி ஒருமித்த முழுத் திறமையையும் வெளிப்படுத்தியதால் வெற்றி பெறமுடிந்தது என இங்கிலாந்து தலைவர் மோர்கன் தெரிவித்துள்ளார்..

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி நேற்றுமுன்தினம் கான்பூரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. டோனி 36 ஓட்டமும், சுரேஷ் ரெய்னா 34 ஓட்டமும், கோலி 29 ஒட்டமும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தலைவர் மோர்கன் 51 ஓட்டமும், ஜோரூட் 46 ஓட்டமும் எடுத்து வெற்றிக்கு முந்திய பங்கு வகித்தனர்.

வெற்றி குறித்து இங்கிலாந்து தலைவர் மோர்கன் கூறியதாவது:-

இந்திய சுற்றுப் பயணத்தில் நாங்கள் பெற்ற முழுமையான வெற்றி இதுவாகும். முழு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறோம். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டைமல் மில்லஸ், ஜோர்டன் அணிக்கு என்ன தேவையோ அதை செய்தனர்.

சிறிய மைதானத்தில் இந்திய துடுப்பாட்டவீரர்களுக்கு நன்கு நெருக்கடி கொடுத்தனர். மிடில் ஓவரில் மொயின் அலி பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. இதுதான் ஆட்டத்தின் முக்கியமானது. விராட் கோலி அவுட்தான் மிக திருப்பு முனையாக இருந்தது. சாம் பில்லிங்ஸ், ஜாஜன் ராய் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

038225col8394165318114_5177110_27012017_AFF_CMY

Related posts: