திருமண பந்தத்தில் இணையும் மெஸ்ஸி!

Monday, June 12th, 2017

கால்பந்து உலகில் புகழ் பூத்த ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

தனது நீண்டநாள் தோழியான அண்டோனெல்லா ரோகுஸோவை, அவர் தனது சொந்த ஊரான ரொசாரியோவில் எதிர்வரும் 30ஆம் திகதி மணம்முடிக்கவுள்ளார். இதனை மெஸ்ஸியின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

இதுவரை மெஸ்ஸிஅண்டோனெல்லா ரோகுஸோ ஜோடிக்கு திருமணம் ஆகவில்லை என்றாலும் 4 வயதில் தியாகோ என்ற மகனும், ஒரு வயதில் மேடியோ என்ற மகனும் உள்ளனர்.

மெஸ்ஸிஅன்டோனெல்லா ரோக்குஸ்ஸோ திருமணத்தில் பார்சிலோனா அணி வீரர்களான நெய்மர், லூயிஸ் சுவாரஸ், செஸ்க் ஃபப்ரே காஸ், சேவி ஹெர்னாண்டஸ் உள்ளிட்ட 21 பேர் உட்பட 250 பேர் கலந்து கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திருமணத்தில் கொலம்பியாவின் பொப் பாடகி ஷகிரா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸியின் சக வீரரான ஜெரார்; பைக்யூவின் மனைவி தான் ஷகிரா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜென்டினா பாடகி கரினா இந்த திருமணத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடவுள்ளார். கரினா, ஆர்ஜென்டினா மற்றும் மஞ்செஸ்டர்; சிட்டி கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான செர்ஜியோ அகுராவின் மனைவி ஆவார்.

மெஸ்ஸியின் திருமணம் லத்தின் அமெரிக்க முறையில் நடைபெற உள்ளது. திருமணத்துக்கு வருகை தருபவர்களிடம் பரிசாக லியோ மெஸ்ஸி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குமாறு கேட்கவும் மணமக்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts: