திருமண நிச்சயத்தை அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!

பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் தனது திருமணம் நிச்சயமாகி விட்டதாக , ரெடிட் இணையதள பக்கத்திலேயே உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை செரீனா ஒரு கவிதை வடிவில் வெளிப்படுத்தியுள்ளார். ஒஹானியனும் தானும் முதலில் சந்தித்து கொண்ட ரோம் நகருக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னிடம் அவர் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாகவும், தான் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் செரீனா தெரிவித்தார்.
இந்த ஆண்டு தனது ஏழாவது விம்பிள்டன் ஒற்றையர் பட்டத்தையும், 22-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று சாதனை படைத்த செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளார்.
Related posts:
விளையாடவில்லை எனில் நட்டஈடு - பாகிஸ்தான் கிரிக்கெட் சபை!
மீண்டும் இலங்கை தோல்வி!
சென்.ஜோன்ஸ் பழைய மாணவர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது யாழ்.மத்திய கல்லூரி பழைய மாணவர் அணி!
|
|