திருப்பிக் கொடுக்காமல் மாட்டோம்: அவுஸ்திரேலியா!

Friday, October 6th, 2017

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.இத்தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.

இதனால் அடுத்து வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி, அவுஸ்திரேலியா அணியை வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பும் என்று இந்திய ரசிகர்கள் கூறி வருகின்ற்னர்.

இந்நிலையில், ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதில் அடி கொடுக்காமல் நாங்கள் போகமாட்டோம் என்றும், அதன் காரணமாகவே அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 14 பேரில் 10 வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடியவர்கள், அந்த அனுபவத்தை வைத்து இந்திய அணியை வீழ்த்துவோம் என்று வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஹென்ரிக்ஸ், ஒருநாள் தொடர் தோல்வியை மறந்து விட்டு, ஒரு புதுத்துவக்கத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.தலைவர் ஸ்மித், வார்னர் உட்பட பலர் ஐபிஎல் அனுபவம் பெற்றவர்கள். இதனால் பதிலடி கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று கூறியுள்ளார்.

Related posts: