திமுத் – மஹேல ஒரே கருத்து!

Sunday, August 11th, 2019

டெஸ்ட் போட்டிகளுக்கான உலகக் கிண்ணம் நடத்தப்படுவது மிகச் சிறந்தது என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், அவர் தெரிவிக்கையில் தற்காலத்தில் விரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறான தொடர்கள் எதிர்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் பாதுகாக்கும் என தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கொண்டு வரப்பட்ட உலக்கிண்ண டெஸ்ட் தொடர் முக்கியமான ஒரு நல்லதொரு திட்டம் என இலங்கை அணியின் முன்னால் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: