திணறும் சென்.ஜோன்ஸ்! முன்னணியில் சென்றல்!!
Saturday, March 10th, 2018வடக்கின் பெருஞ்சமரின் இரண்டாவது இன்னிங்ஸில் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகின்றது சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணித் தலை வர் தசோபன் முதலில் பந்துவீச முடிவுசெய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 217 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 43 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. இந்நிலையில் நேற்றைய இரண்டாம் நாளில் அபாரமாக ஆடிய மத்திய கல்லூரி அணி தனது முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் அன்டனி ஜெயதர்ஷன் 77 ஓட்டங்களையும் செல்வராசா மதுஷான் 52 ஓட்டங்களையும் ராஜரட்னம் ராஜ்கிளிண்டன் 54 ஓட்டங்களை யும் விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
அதனைத் தொடர்ந்து 111 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சென்.ஜோன்ஸ் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் மளமளவென விக்கெட்டுக்களை இழக்க 8 ஓட்டங்கள் பெறுவதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. இன்றைய கடைசி நாளில் சென்.ஜோன்ஸ் அணி தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது
Related posts:
|
|