திட்டமிட்டு நடாத்தப்பட்ட விபத்தா? பாதுகாப்பான நிலையில் இங்கிலாந்து அவுஸ்திரேலிய வீரர்கள்!

Saturday, December 23rd, 2017

வியாழன் மாலை மெல்போர்னில் உள்ள ஃபிலிண்டர்ஸ் ஸ்ட்ரீட் ஸ்டேஷனுக்கு அருகாமமையில் கார்விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது, இதன் விளைவாக, 14 முதல் 16 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் போலீஸார் கார் ஓட்டுநர் உள்பட இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“மெல்போனில் ஃபிளைய்டர்ஸ் ஸ்ட்ரீட் சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து வீரர்களும் நிர்வாகமும் பாதுகாப்பாக இருக்கின்றதாக” ECB அறிக்கை தெரிவிக்கிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கையை வெளியிடவில்லை, ஆனால் அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களுக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையின் கருத்துப்படி, ஃப்ளைண்டர்ஸ் ஸ்ட்ரீட்டில் கார் “பல பாதசாரிகளோடு மோதியது” மற்றும் பலர் காயமுற்றனர், இதனால் பலர் ஒரு மோசமான நிலையில் இருந்தனர். ஃப்ளைண்டர்ஸ் ஸ்ட்ரீட் நகர மையம் வர்த்தக நகரமாக உள்ளது, மற்றும் MCG இலிருந்து இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவாக உள்ளது, ஐந்து நாட்களுக்குப் பின்னர் பாக்ஸிங் டே அஷெஸ் டெஸ்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானுடனான பாக்ஸிங் டே டெஸ்ட் டெஸ்ட் ஆரம்பிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு விக்டோரியா போலீசாரால் சந்தேகத்துக்கிடமான பல கைதுகள் இடம்பெற்றதோடு MCG இல் பாதுகாப்பு அதிகரிக்கப்படது. விக்டோரியா பொலிஸ் தலைமை ஆணையர் ஃபெடண்டர்ஸ் சதுக்கத்தில், ஃபிளைய்டர்ஸ் ஸ்ட்ரீட் ஸ்டேஷன் மற்றும் செயின்ட் பால் கதீட்ரல் ஆகியவற்றில் தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிட்டார்கள் என்ற ரீதியில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். எனவும் அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை குறி வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

 திட்டமிடப்பட்ட தாக்குதல் என்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட வருகின்ற போதும், உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.

Related posts: