திசர பெரேரா வீச்சில் அசத்தல்!

அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பேஸ் லீக் கிரிக்கட் போட்டியில் எடிலைட் ஸ்ட்ரைகர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 6 ஓட்டங்களால் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை பெற்று கொண்டது.
பதிலுக்கு துடுப்பாடிய எடிலைட் ஸ்ட்ரைகர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 165 ஓட்டங்களையே பெற்றது.
மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி சார்பில் பந்து வீச்சில் திஸர பெரேரா 25 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கட்டுகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொடரில் வெற்றிபெறும் அணி 2019 ஆம் உலக கிண்ண போட்டிக்கு தகுதி!
இறுதி டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு!
ஓய்வு குறித்து ரங்கன ஹேரத் அறிவிப்பு!
|
|