திக்வெல்லவிற்கு போட்டித் தடை – ICC உத்தரவு!

Tuesday, February 21st, 2017

இலங்கை அணியின் ஆரம்ப கட்ட துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு சர்வதேச கிரிக்கெட் சபை போட்டித் தடை விதித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியுடன் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற 2 ஆவது ரி.20 போட்டியின் போது தன்னுடைய ஆட்டமிழப்பு தொடர்பில் அவர் செயற்பட்ட விதம் தொடர்பில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு ஒருநாள் போட்டியும், ஒரு இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையால் அவுஸ்திரேலிய அணியுடன் நாளை இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியிலிருந்து நிரோஷன் திக்வெல்ல நீக்கப்பட்டுள்ளார்.

ICC1

Related posts: