திக்கம் வைரவிழா தொடர்: கிண்ணத்தை வென்றது பாசையூர் அன்ரனிஸ்!

Tuesday, February 20th, 2018

திக்கம் சனசமூக நிலையம் தமது வைர விழாவை முன்னிட்டு நடத்திய கால்பந்தாட்டத்தொடரில் பாசையூர் சென். அன்ரனிஸ் அணி கிண்ணம் வென்றது.

திக்கம் சனசமூக நிலைய மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றஇறுதியாட்டத்தில் பாசையூர் சென். அன்ரனிஸ் அணியை எதிர்த்து பலாலி விண்மீன்அணி மோதியது. கோல்கள் ஏதுமின்றி முடிவுக்கு வந்தது முதல் பாதி. இரண்டாவது பாதியாட்டத்தில் பாசையூர் சென். அன்ரனிஸ் அணியின் வீரர்கனிஸ்ரன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி அனைத்துப்பார்வையாளர்களையும் கவரும் விதமாக கோலைப் பதிவு செய்தார்.

1:0 என்று சென். அன்ரனிஸின் ஆதிக்கத்துடன் ஆட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. மாற்றங்கள் ஏற்படாததை அடுத்து முடிவில் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது பாசையூர் சென். அன்ரனிஸ் அணி. ஆட்டநாயகனாக சென். அன்ரனிஸ் அணியின் கனிஸ்ரன், தொடராட்ட நாயகனாக அதேஅணியின் காண்டீபன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

Related posts: